கோவை நகரத்தார் சங்கம்- ஒரு கண்ணோட்டம்

         நகரத்தார்கள் நூறு ஆண்டுகளுக்கு முன் இணைந்து நிறுவிய அமைப்பு நமது பேரூர் தர்மநிதி, இந்த அமைப்பு தொடர்வதற்க்கு காரணமானவர்கள் நற்சாந்துபட்டி பழ.சி.ராம குடும்பத்த்தாரும், தேவகோட்டை ஜமின்தார் குடும்பம் மற்றும் AR.L.V.நடராஜன் செட்டியார் குடும்பத்தாரும் ஆவர். பேரூர் பட்டீஸ்வரப் பெருமானுக்குப் பூக்கள் தருவதற்காகவும் அபிஷேகத்திற்க்குப் பால் தருவதற்காககவும் நந்தவனம் மற்றும் மடம் அமைத்து மகிழ்ந்தனர். நகரத்தார்க்ள் ஒன்று கூடி இணைய ஏதுவாய் பேரூர் பட்டீஸ்வரப் பெருமானின் உற்சவத்தில் சில மண்டகப்படிகளை ஏற்று இறைப்பணி செய்து மகிழ்ந்தனர். இறைப்பணி  மட்டும் போதுமா, சமுகப் பணியும் ஆற்றினால் நிறைவாக இருக்குமே என்ற எண்ணம் தோன்றிய பொழுது 1964 அக்டோபர் 20ம் தேதி நமது பேரூர் மடத்திலேயே கோயம்புத்தூர் நகரத்தார் சங்கத்தை தோற்றுவித்தனர். சங்கததின் முதல் தலைவராக தேவகோட்டை தெற்கு வீட்டு 'ந' என்றழைக்கப்படும் AR.L.V.நடராஜன் செட்டியார்  பொறுப்பேற்று கொண்டார்கள். துணைத்தலைவர்களாக நற்சாந்துபட்டி பழ.சி.ராம ராமநாதன் செட்டியார், தேவகோட்டை P.S.S சோமசுந்தரம் செட்டியார், பொதுச் செயலாளராக கண்டவராயன்பட்டி AL சிங்காராம் செட்டியார், பொருளாளராக சிறாவயல் S.M ரெங்கநாதன் செட்டியார் ஆகியோர் தேர்வு பெற்றனர்.

       20.10.1964 ல் தொடங்கப்பட்ட சங்கத்திற்க்கு 16.05.1968 ஆம் நாள் கவுலிபிரவுன் சாலையில் உள்ள நமது சங்கத்தின் அடிமனை ரூ.30.400/-க்கு வாங்கப்பெற்றது .இந்த பணியில் அலவாக்கோட்டை N.K நாகப்பசெட்டியார், நாச்சியார்புரம் S.V.N நாகப்பசெட்டியார், வேந்தன்பட்டி K.R ஆண்டியப்ப செட்டியார், சிறாவயல் S.M ரெங்கநாதன் செட்டியார், கீழச்சிவல்பட்டி S.M. K.R கருப்பன் செட்டியார், நாற்சாந்துபட்டி PL.S.RM.ராமநாதன் செட்டியார் ஆகியோர் முனைப்போடு இணைந்தார்கள்.

        காலி இடத்தில் கட்டிடம் கட்டுவது எப்போது? இந்தக் கேள்வியைக் கேட்டு பதில் தேடியவர்கள் நற்சாந்துப்ட்டி L. சோமு, S.M ரெங்கநாதன் செட்டியார் ஆகியோர். இவர்களது தளராத முயற்சியாலும், சொந்த  பணத்தை பற்றாக்குறைக்கு் செலவழித்து தொய்வில்லாமல் கட்டியதாலும், மற்றவர்களின் பெரும் துணையாலும் 1974 ஆம் ஆண்டு ஒரு பகுதி கட்டிடம் கட்டப்பெற்றது. இந்தக் கட்டிடம் கட்டப்பெருந்துணையாக அமைந்தது ராஜாசர் முத்தைய்யா செட்டியார் அவர்களின் செழுமையான நன்கொடை மட்டுமல்ல, அதற்கு துணை நின்ற தலைமை நிர்வாகி கருங்குளம் திரு.ராம.ரெங்கநாதன் செட்டியாரும், திரு.L. சண்முகம் செட்டியாரும் என்பது குறிப்பிடப்படவேண்டிய செய்தி. இந்தப் பணியில் ஈடுபட்ட இன்னொரு முக்கியமானவர் திரு.AL. சிங்காரம் செட்டியார் ஆவார்கள்.

        இடம் வாங்குவதிலிருந்து கட்டிடம் கட்டியது வரை மட்டுமல்ல , எற‌த்தாழ நாற்பது ஆண்டுகள் சங்கத்தின் வளர்ச்சிக்குப் பாடுபட்டவர் ஆடிட்டர் .திரு. C ல‌ஷ்மணன் ஆவார்கள். கணக்குத்தணிக்கைக்கும் இன்னப்பிற யோசனைகளுக்கும் சங்கத்தின் வள‌ர்ச்சிக்கும் பாடுபட்டது போற்றுதலுக்குறியது .

       கட்டிடம் கட்டி ஆகி விட்டது.காரியங்கள் ஆற்ற காசு வேண்டுமே. இப்படி யோசித்தவர் திரு. இராம. ஏகப்பன் அவர்கள் நன்கொடைகள் பெற்றும் பற்றாக்குறைகளை தன் சொந்தப் பண‌த்தாலும் ஈடு செய்து , வாடகை வருமானம் ஏற்பட 14 அறைக‌ளைக் கட்டிய பெருமகன் திரு. இராம. எகப்பன் அவர்கள். அவர்களோடு இணைந்து பணியாற்றியவர்கள் அன்றைய தலைவர்.திரு. L சோமு, புருக்பாண்ட் திரு. அண்ணாமலை செட்டியார், திரு. S.E.S.V நாராயணன், திரு. PL.S.RM . பழனியப்ப செட்டியார் போன்ற பல நகரத்தார் பெருமக்கள் கல்விப் பணி செய்யும் ஆசையில் தொடங்கப்பட்டது தான் நகரத்தார் தொடக்கப்பள்ளி. பள்ளிக்கும் தனியாக கட்டிடம் கட்ட நன்கொடை பெற மலேசியா சிங்கப்பூர் நகரத்தார்களை அணுக திரு. S.MR.S. சுப்பையா செட்டியர் ,திரு. AL ராமநாதன் செட்டியார் திரு.V சம்மந்தம் செட்டியார் திரு.R சேக்கப்ப செட்டியார் போன்றவர்கள் தம் சொந்தச் செலவில் மலேசியா சிங்கப்பூர் சென்று நன்கொடை வாங்கிக்கொண்டு வந்தார்கள்.

     1948ல் தலைவராயிருந்த பெருந்தலைவர் S.MR.S. சுப்பையா செட்டியார் அரங்கம் கட்டும் பணியைத் தொட்ங்கினர்க்ள், அப்போது செயலர்களாயிருந்த குழந்தைக் கவிஞர் செல்ல கணபதி அவர்களும் , காசிநாத் A. நடராஜன் அவர்களும் பெரிதும் பாடுபட்டார்கள். கட்டிடம் கட்ட பணம் பற்றாக்குறை ஏற்பட்ட பொழுதுதெல்லாம் பெரும் அளவில் பெருந்தலைவர் சுப்பையா செட்டியார் அவர்களும், சிறிய பற்றாக்குறைகளை குழந்தைக் கவிஞர் செல்ல கணபதி அவர்களும் ஈடு செய்து அரங்கத்தைக் கட்டிமுடித்தார்கள். அரங்கக் கட்டுமானச் செலவுக்கு பள்ளிக்கூடம் கட்ட மலேசியா சிங்கப்பூர் நகரத்தார்கள் நன்கொடை தந்த பணத்தை பயன்படுத்திக் கொண்டதால் அரங்கத்திற்க்கு மலேசியா சிங்கப்பூர் நகரத்தார் அரங்கம் எனப் பெயரிடப்பட்டது.

   சங்கத்தின் சொத்துக்கள் காப்பாற்றபட வேண்டுமே, அதற்குப் பெரும் முயற்சி எடுத்து முறையாக ஒர் அற‌க்கட்டளையை நிறுவியவர் திரு S.E.S.V. நாராயணன் செட்டியார் அவர்கள். அவருக்குத்துணை நின்றவர்கள் திரு.AR முத்து விரப்பசெட்டியார், திரு. M.P.V. அழகப்ப செட்டியார் . திரு. PL சிவகாமி, திரு. S. சுந்தரேசன், திரு. VR அழகப்பன், போன்றவர்கள் ஆவர். திரு. S.E.S.V. நாராயணன் நிர்வாக காலத்தில் சங்கத்தின் வெள்ளிவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது இன்னும் ஒரு சிறப்பாகும்.

   ஒவ்வொருவரும் தலைவராக பதவி ஏற்கும் பொழுது என்ன பணி செய்யலாம், கட்டிடத்தை எப்படி மேம்படுத்தலாம் என்று திட்டமிடுவது வாடிக்கையான வழக்கமாயிற்று . AL.AR.V. காளைராஜா செட்டியார், AR. முத்துவிரப்பன், சபா சிங்காரம், காசு மணியன், A.அண்ணாமலை , R.வேலு ஆகியோர் நிர்வாக காலத்தில் சங்கதின் விழா மேடையும் ,பிளாஸ்டிக் இருக்கைகளும் அமைக்கப்பெற்றன. 2004ல் திரு PL.S.R.M சிவனடியான் செட்டியார் தலைமை பதவி ஏற்றபொழுது மலேசியா சிங்கப்பூர் அரங்கத்தின் பின்புறம் ஒரு சிறிய அரங்கு மற்றும் இரண்டு தங்கும் அறைகள் கட்டிமுடித்தார்கள், திரு சிவனடியான் செட்டியார் கணிசமான தொகையை நன்கொடை தந்ததுடன் மற்றவர்களிடமும் நன்கொடை பெற்றுப் பணியை நிறைவுசெய்யும் பொறுப்பை திரு இராம ஏகப்பனிடம் கொடுத்தார்கள்.அவர்களுடன் SP. மணியன், A நடராஜன் ,KS.சாத்தப்ப்ன், A.அண்ணாமலை S.அண்ணாமலை, ஆகியோர் இணைந்து இந்தப் பணியை மிகச் சிறப்பாக நிறைவேற்றினார்கள். ALS. அழகப்ப செட்டிடியார் , N.R.M வெள்ளயன், K. ஆறுமுகம் ,M.கருப்பையா ஆகியோர் நிர்வாக காலத்தில் நகரத்தார்கள் அமாவாசை தர்ப்பணம் செய்ய சங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.

       ஆடிட்டர் C.லெட்சுமணன், T. ராஜேந்திரன், KN. மணிவண்ணன், VR. கண்ணப்பன் நிர்வாக காலத்தில் நகரத்தார் சங்கக் கட்டிடத்திற்க்கு பொலிவான முகப்பும், குளிரூட்டப் பெற்ற அரங்கமும் அமைந்த‌து . தலைவராக குழந்தைக் கவிஞர் செல்ல கணபதி அவர்களும், துணைதலைவராக‌ P.S.P பெருமாள் திரு. S.P. மணியன் , நிர்வாகச் செயலாளராக KR. மணிகண்டன் , பொதுச் செயலாளராக திரு. KP.RM. செந்தில்நாதன் பொருளாளராக L. ராமனாதன் ஆகியோர் இணைந்து ஆற்றிய பணியாலும், கோவை நகரத்தார்களின் விசாலமான மனதில் விளைந்த, விரிந்த நன்கொடையாலும் குளிரூட்டப்பட்ட அரங்கினை அமைக்க சாத்தியமாயிற்று. கீழே கட்டப்பெற்ற 14 அறைகளில் 7 அறைகளை வாடகைக்கு இருந்தவர்கள் மகிழ்வோடு காலி செய்து த‌ந்ததால் கீழே சிறிய சாப்பாட்டு அறையையும் கட்டி முடிந்தது.

         குளிரூட்டப்பட்ட புதிய அரங்கத்தைத் திறந்து வைக்க வந்த குமார ராணி மீனா முத்தையா அவர்களும், டாக்டர் M.A.M ராமசாமி செட்டியார் அவர்களும் தந்த ரூபாய் ஜந்து லட்சதில் வாங்கப்பட்டதுதான் மின் உற்பத்தி எந்திரம்.(Generator).

          5.10.2013 மற்றும் 6.10.2013 சங்கத்தின் பொன்விழாவை வரலாறு காணாத வகையில் நடத்திக் காட்டிய‌ பெறுமை திரு. PL.S. சுப்பிரமணியன்,  திரு. PL.K. பழனியப்பன், திரு VR. கண்ணப்பன், திரு M.M. அசோக்குமார், திரு.AR. நாராயணன், திரு. M. லெட்சுமணன் ஆகியோரையே சாரும் . இவர்கள் காலத்தில் நல்ல நூலகம் மற்றும் பொறியியல் கல்வி நிதி உதவி வழங்கும் திட்டம் ஆகியவை உருவாக்கப்பட்டன.

21.12.2014 அன்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் Lion. Er. PDG வளர்மதி அண்ணாமலை அவர்கள் தலைவராகவும் M. கருப்பையா, T.சுப்பிரமணியன் ஆகியோர் துணைத் தலைவர்களாகவும், K. சிதம்பரம் (சொக்கு) பொதுச் செயலாளராகவும், S. கணேசன் நிர்வாகச் செயலாள‌ராகவும் N. சிதம்பரம் பொருளாளராகவும் தேர்வு செய்யப்பட்டார்கள்.

Home | Corlate ;