கோவை நகரத்தார் இளைஞர் சங்கம்

            கோவை நகரத்தார் இளைஞர் சங்கம் 1981ம் ஆண்டு ஆடிட்டர் திரு.VR.கண்ணப்பன் அவர்களைத் தலைவராகக் கொண்டு ஆரம்பிக்கப் பெற்றது. வெள்ளிவிழாவைக் கண்ட இந்த சங்கம் கடந்த 33 ஆண்டுகளாகச் சிறப்பாக செயல்பட்டு வருகின்ற சங்கமாகும்.

          
           கோவை நகரத்தார் இளைஞர் சங்கத்திற்க்கு துவக்கத் தலைவரைத் தொடர்ந்து காசிநாத் திரு. A.நடராஜன் அவர்களும் திரு. K.ஆறுமுகம் அவர்களும் திரு.K.சிதம்பரம் அவர்களும் தலைவர்களாக இருந்து திறம்பட இளைஞர் சங்கத்தை செயல்படுத்தி வந்தார்கள்.

           தற்போதைய தலைவராக திரு.KR.மணிகண்டன் அவர்களும் துணைத் தலைவர்களாக திரு.N. சரவணன் மற்றும் திரு. M.மணிகண்டன் அவர்களும் நிர்வாகச் செயலாளராக திரு. C. செந்தில் நாராயணன் அவர்களும் பொதுச் செயலாளராக திரு. VR.சோலைமலை அவர்களும் பொருளாளராக திரு. S.PL சண்முகம் அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பேற்று தற்போது இளைஞர் சங்கத்தை சிற‌ப்பாக செயல்படுத்தி அனைத்து ஊர் நகரத்தார்க்ளும் வியக்கும் வண்ணம் எழுச்சிமிகு கோவை நகரத்தார் இளைஞர் சங்கமாக செயல்படுத்தி வருகிறார்கள்.

 

கோவை நகரத்தார் இளைஞர் சங்கத்தின் பணிகள்

ஒவ்வொரு ஆங்கில மாதமும் ஞாயிற்றுக்கிழமை பேரூரில் முருகனுக்கு அபிஷேகம் , விடுதியில் வேலுக்கு அன்னதானம்.

ஒவ்வொரு மாதமும் சஷ்டி அன்று காட்டூர் முருகனுக்கு அபிஷேகம்.

தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று கோவை அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோவிலில் திருவிளக்கு பூஜை.

கோவையில் நகரத்தார் பிள்ளையார் நோன்பு இளைஞர் சங்கத்தால் சிறப்பாக நடத்தப்பெறுகிறது.

ஒவ்வொரு வருடமும் கோவை நகரத்தார் மாணவ,மாணவியருக்கு விளையாட்டுப் போட்டிகளும், கலைப்போட்டிகளும் மற்றும் 10,12 ஆம் வகுப்பில் கோவையில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு பரிசுத் தொகையும், சான்றிதழும் வழங்கப்படுகிறது .

வருடந்தோறும் எல்.கே.ஜி முதல் 12ஆம் வகுப்பு வரை சுமார் 300 முதல் 350 நகரத்தார் மாணவ, மாணவியருக்கு கல்வி நிதி உதவி வழங்கப்பட்டுவருகிறது.

தன்னம்பிக்கை முகாம்கள், இலக்கிய விழாக்கள், மற்றும் பல நிகழ்ச்சிகள் ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது.

"கோவையில் நகரத்தார் முகவரி" என்ற புத்தகம் 1995 ஆம் ஆண்டு முதல் , 4 வருடத்திற்க்கு ஒரு முறை வெளியிடப்படுகிறது.
Home | Corlate