நாட்டுக்கோட்டை நகரத்தார் இறைப்பணி

      கோவை வாழ் நகரத்தார்கள் சார்பாக கோவையில் பேருர் என்னும் இடத்தில் அருள்மிகு பட்டீஸ்வரர் திருக்கோவில் அருகில் நொய்யல் ஆற்றிக்கு செல்லும் வழியில் நாட்டுக் கோட்டை நகரத்தார் தர்மநிதி சார்பாக நகரத்தார் நந்தவன‌  மடம் ஒன்று அமைக்கபெற்று தினசரி திருக்கோவில் பூஜைக்கு மேற்படி நந்தவன மடத்தில் இருந்து பூக்கள் பறித்து மாலை தொடுத்து அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

        இந்த நந்தவன மடத்தில் கோவில் உற்சவ காலங்களில் நிகழ்ச்சிகள் நடத்தப்பெற்று விழாக்களும் சிறப்பாக நடந்து வருகிறது. இந்த மடத்தின் மேற்பார்வையை கவனித்து வரும் காரியக்காரர்களாக 1954 ம் வருடத்திற்க்கு முன் தேவகோட்டை திரு. AR.L.V. நடராஜன் செட்டியார், நற்சாந்துபட்டி திரு. KM.KM குமரப்ப செட்டியார் , திரு.PL.SRM. ராமநாதன் செட்டியார் ஆகிய மூவரும் சிறப்பாக கவனித்து வந்திருக்கிறார்கள். அதன்பின்னர் வருடத்திற்க்கு இரண்டு காரியக்காரர்கள் ஒவ்வொருவரும் இரண்டு வருடம் என்ற கணக்கில் மேற்படி மடத்தை நிர்வகித்து வந்து கொண்டிருக்கிறார்கள்.

           

                          நாட்டுக்கோட்டை நகரத்தார் தர்மநிதி சார்பாக ஆண்டுதோறும்

            பேருர் அருள்மிகு பட்டீஸ்வரர் திருக்கோவிலில் நடத்த‌ப்படும் விழாக்கள்

     *ஆவணி மாதம் சுக்ல சதுர்த்தசியில் நடராஜருக்கு அபிஷேகம்.
     *புரட்டாசி மாதம் விஜயதசமி அன்று அம்பு போடுதல் நிகழ்ச்சி .
     *மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனம் நடராஜருக்கு அபிஷேகம்.
     *பங்குனி மாதம் திருக்கோவிலில் நடைபெறும் பங்குனி உத்திரத் திருவிழாவில் மடத்திற்க்கு சுவாமி அம்பாள் எழுந்தருளி அபிஷேக ஆராதனைகள். அன்று இரவு தெப்ப நிகழ்ச்சி நகரத்தார் மண்டகப்படி.

     *2012 ம் ஆண்டு முதல் நவராத்திரி ஒன்பது நாள் நிகழ்ச்சியிலும் பூஜை கட்டளை ஏற்பாடு செய்து நடந்து வருகிறது.
     *சென்ற ஆண்டு முதல் அருள்மிகு பட்டிஸ்வரர் திருக்கோவிலில் தினசரி காலசந்தி , உச்சிகாலம், சாயரட்சை  மற்றும் அர்த்தசாமம் பூஜை ஆகியவற்றிக்கு மடத்திலிருந்து பால், தயிர், பன்னீர் மற்றும் பூக்கள் ஆகிய        அபிஷேகப் பொருட்கள் கொண்டு சென்று ஆராதனைகள் சிற‌ப்பாக செய்யப்பட்டு வருகிறது.

நந்தவன மடத்தில் நடைபெறும் அனைத்து விழாக்களுக்கும் விடுதியில் அனைவருக்கும் உணவு வழங்கப்படுகிறது.

      பேரூர் நந்தவன மடத்தில் பூக்கள் பராமரிப்பு குறைந்து பூஜைக்கு பூக்கள் வெளியில் வாங்கும் நிலைமை எற்பட்டு தற்போது காரியக்காரர்களாக இருந்து வருபவர்களின் சீரிய முயற்சியினால் மீண்டும் பூந்தோட்டம் அமைக்கப்பெற்று நந்தவனத்திலிருந்தே தினசரி பூஜைக்கு பூக்கள் கொடுக்கும் அளவிற்க்கு சிறப்புடன் செயல்பட்டு வருகிறது.

        ஒவ்வொரு ஆண்டும் பிள்ளையார் நோன்பு அன்று கோவை நகரத்தார் அனைவருக்கும் நகரத்தார் தர்மநிதி சார்பாக "பூ" கட்டிக் கொடுத்து வருகிறார்கள்.        மேழும் நந்தவன  மடத்தில் விழாக்காலங்களில் கூட்டங்கள் அதிகமாக வருவதால் முதல் தளத்தில் புதிதாக‌ டைனிங் ஹால் கட்டப்பட்டுள்ளது .

      மேற்படி நகரத்தார் தர்மநிதி மென்மேலும் பல ஆன்மீகப் பணிகளை செய்து அதன் வளர்ச்சிக்காக அருள்மிகு பட்டீஸ்வரரைப் பிரார்த்திபோம்.

 

Home | Corlate