பிள்ளையார்பட்டி விநாயகர்

பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் இவை

 

நாலும் கலந்துனக்கு நான் தருவேன் - கோலம் செய்
 

துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்கு

 

சங்கத் தமிழ் மூன்றும் தா

 

-ஒளவையார்

   

காடுவெட்டிப் போட்டுக் கடிய நிலம்திருத்தி
வீடுகட்டிக் கொண்டிருக்கும் வேள்வணிகர்- வீடுகட்கு
அன்றைக்கு வந்த எங்கள் அம்மா இலக்குமியே
என்றைக்கும் நீங்கா திரு!

நின்மேலும் ஆணை நின்மகன் மேலும் ஆணை
நின்மா கொழுநன் தன்மேலும் ஆணை
தமிழ்மேலும் ஆணை தவமா வணிகச்
சின்னஞ் சிறுவர் தெரியாத காளையர்
என்செயினும் பின்னும் பொறுத்திருப் பாயே
பெரிய இழக்குமியே!


                                                -பாடுவார் முத்தப்ப செட்டியார்
   

நகரத்தார்,  சிகரத்தார்

பண்டை வாணிபப் பசுமைப் பரம்பரை
பழைமை இலக்கியம் பாராட்டும் தலைமுறை
அறவியலை வாணிபம் அகவிருந் தோம்பல்
திருமண முறையில் செந்தமிழ்ப் பாங்கு
கோவில் கல்லூரி கொடுத்தநற் சிறப்பு
யாவும் நிறைந்த அற்புதக் குல‌த்தவர்
கண்ணகி என்னும் கண்ணாத் தாள்இவர்
புண்ணிய குலத்தில் பூத்த மணமலர்
எண்ணத் தொலையா எத்தனை கோடிகள்
அள்ளிக் கொடுத்தனர்; அறத்தினை வளர்த்தனர்!
நகரத் தாரெனில் நாட்டிலும் நகரிலும்
சிகரத் தாரெனச் செந்தமிழ் உரைக்கும்
கோவை நகரில் குவிந்தஇக் குலத்தார்
சேவைக் கென்றே செய்தனர் மாளிகை
செய்த மாளிகைத் திறப்பு விழாவில்
கூடும் அனைவரும் குன்றென வாழ்க!
நாளொரு அறமும் பொழுதொரு திறமும்
நகரத் தார்பெற நாயகன் அருள்க!

                                                                        - கண்ணதாசன்

 

Home | Corlate